கந்தர்வகோட்டை அருகே புதுக்கோட்டை தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் பழுதாகி நின்று கொண்டிருந்த லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் லாரியின் பணியாளர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பேருந்தில் பயணித்த ஐந்தரை வயது சிறுமி உட்பட எட்டு பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்னர். இது குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டுள்ளனர்.