கரூரில்,தேர்தலின் போது பணியாற்றிய டிஜிட்டல் போட்டோ ஸ்டுடியோ உரிமையாளருக்கு உரிய தொகை வழங்காத தாசில்தார்கள் மீது நடவடிக்கை எடுக்க புகார் மனு.

கரூரில்,தேர்தலின் போது பணியாற்றிய டிஜிட்டல் போட்டோ ஸ்டுடியோ உரிமையாளருக்கு உரிய தொகை வழங்காத தாசில்தார்கள் மீது நடவடிக்கை எடுக்க புகார் மனு.

Update: 2024-11-25 11:46 GMT
கரூரில்,தேர்தலின் போது பணியாற்றிய டிஜிட்டல் போட்டோ ஸ்டுடியோ உரிமையாளருக்கு உரிய தொகை வழங்காத தாசில்தார்கள் மீது நடவடிக்கை எடுக்க புகார் மனு. கரூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் இன்று வாராந்திர பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. கரூர் செங்குந்தபுரம் பகுதியில் அசோக் டிஜிட்டல் போட்டோ ஸ்டுடியோ நடத்தி வருபவர்கள் அசோக்குமார், வைத்தீஸ்வரன் மற்றும் ராமச்சந்திரன். 2021 சட்டமன்ற தேர்தலின் போது, கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம், குளித்தலை சட்டமன்ற தொகுதியில் பணியாற்றக்கூடிய முகவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக, ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் தனித்தனியாக எல் இ டி டிவி பொருத்தி பயிற்சி அளிக்க சம்பந்தப்பட்ட நான்கு சட்டமன்ற தொகுதியில் பணியாற்றிய வட்டாட்சியர்கள் கூறியிருந்தனர். இந்த பணிகளை அவர்கள் கூறியது போல அசோக் டிஜிட்டல் போட்டோ ஸ்டுடியோ உரிமையாளர்கள் செய்து கொடுத்தனர். ஆனால், இதற்கு பேசியபடி ரூபாய் 10 லட்சம் வழங்க வேண்டும். தேர்தல் முடிந்த பிறகு மேற்கண்ட தொகையை வழங்காமல் அதிகாரிகள் காலம் தாழ்த்தியுள்ளனர். இது தொடர்பாக இன்று அசோக் டிஜிட்டல் போட்டோ ஸ்டுடியோ உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனு அளித்தனர். அப்போது, இது போன்ற திட்டங்களை செயல்படுத்த அரசின் உத்தரவில் இல்லை எனவும், இது போன்ற செயல்களை செய்ய பணித்த அரவக்குறிச்சி,கரூர், கிருஷ்ணராயபுரம், குளித்தலை தாசில்தார்கள் மீது புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததன் பேரில் இன்று புகார் மனு அளித்ததாக டிஜிட்டல் ஸ்டுடியோ உரிமையாளர்களில் அசோக்குமார் தெரிவித்தார்

Similar News