ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மானியத்தில் வாகனங்களை வழங்கினார் ஆட்சியர் தங்கவேல்.
ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மானியத்தில் வாகனங்களை வழங்கினார் ஆட்சியர் தங்கவேல்.தகவலுக்காக
ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மானியத்தில் வாகனங்களை வழங்கினார் ஆட்சியர் தங்கவேல். கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று வாராந்திர குறைதீர் கூட்டம் நடைபெற்றது. ஏற்கனவே பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு இன்று பல்வேறு நலத்திட்டங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இதன் ஒரு பகுதியாக தாட்கோ மூலம் ரூபாய் 9 லட்சத்து 49 ஆயிரத்து 446 ரூபாய் மதிப்பில், வாங்கிய சரக்கு வாகனத்திற்கு ரூபாய் 3 லட்சத்து 32,306 ரூபாய் மானியத்துடன் பயனாளிக்கு வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இதே போல ரூபாய் 6,81,453 மதிப்பில் வாங்கிய பயணிகள் வாகனத்திற்கு, ரூபாய் 2,38,509 ரூபாய் மானியம் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த பயனாளிக்கும் பயணிகள் வாகனத்திற்கு உண்டான சாவியை வழங்கி வாழ்த்து தெரிவித்தார் மாவட்ட ஆட்சியர் தங்கவேல். இந்த நிகழ்ச்சியின் போது தாட்கோ மாவட்ட மேலாளர் முருகவேல் உடன் இருந்தார்.