திருப்பத்தூரில் பள்ளி மாணவி சீருடையில் வந்து ஆட்சியரிடம் மனு
திருப்பத்தூரில் பள்ளி மாணவி சீருடையில் வந்து ஆட்சியரிடம் மனு
திருப்பத்தூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் 20 க்கும் மேற்பட்ட சீருடையில் பள்ளி மானவிகளோடு பெற்றோர்கள் வழி தடம் கேட்டு மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் மனு கொடுத்ததால் நீங்கள் மனு கொடுத்தால் ஏற்க மாட்டேன? பெற்றோர்களை கடிந்து கொண்ட ஆட்சியர் உடனே நடவடிக்கை எடுக்க வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு! திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் தர்ப்பகராஜ் தலைமையில் நடைபெற்றது இந்த மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்திற்கு திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை குறித்து ஆட்சியரிடம் மனு அளித்தனர் இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கிரி சமுத்திரம் தென்னந்தோப்பு வட்டம் பகுதியில் 20 கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் அந்தப் பகுதியில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு முனீஸ்வரன் கோயில் கட்டிய நிலையில் கோயில் நிர்வாகிகள் இந்த 20 குடும்பத்தைச் சேர்ந்த நபர்களை கோயில் வழியாக வரும் பொது வழியில் அனுமதிக்காமல் நீங்கள் ஏற்கனவே எப்படி வரப்பு வழிகளை பயன்படுத்தினீர்களோ அதே வழியை பயன்படுத்திக் கொள்ளுங்கள் இந்த வழியில் வராதீர்கள் என்று தடுத்து நிறுத்தியதால் சுமார் ஒரு வார காலமாக அந்த பகுதியில் வசிக்கும் மாணவ மாணவிகள் பள்ளிக்கு செல்ல முடியாமல் அவதியுற்று வந்ததால் இன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுக்க வந்தனர் மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியரிடம் இன்று மாலைக்குள் இந்த பிரச்சனை குறித்து விசாரித்து தகவல் கூறுங்கள் என்று உத்தரவிட்டார். மேலும் பள்ளி சீருடையிலேயே மனு கொடுக்க வந்த மாணவ மாணவிகளின் பெற்றோர்களை அழைத்து ஏன் பள்ளி குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் இங்கே அழைத்து வந்தீர்கள் நீங்கள் சொன்னால் நான் கேட்க மாட்டேனா? நடவடிக்கை எடுக்க மாட்டேனா? முதலில் பள்ளி மாணவ மாணவிகளை பள்ளிக்கு அனுப்புங்கள் என்று கடிந்து கொண்டார். மேலும் இது சம்பந்தமாக விசாரணை மேற்கொள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலரையும் பள்ளியின் தலைமை ஆசிரியரையும் வரச் சொல்லி உத்தரவிட்டார் இதனால் மக்கள் குறை தீர்வு நாள் கூட்ட அரங்கில் பரபரப்பு காணப்பட்டது. பேட்டி. அர்ச்சனா பள்ளி மாணவி