கரூரில் , மமாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பெயருக்கு பட்டா மாற்றம் செய்ய மனு.

கரூரில்,மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பெயருக்கு பட்டா மாற்றம் செய்ய மனு.

Update: 2024-11-25 09:41 GMT
கரூரில் ,மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பெயருக்கு பட்டா மாற்றம் செய்ய மனு. கரூர் மாவட்டம், புகலூர் தாலுக்கா, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து, வாராந்திர குறைதீர் கூட்டத்தில் புகார் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் புகலூரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 1956 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது எனவும்,அப்பகுதியை சேர்ந்த குமரப்ப கவுண்டர் என்பவர் தனது 15.30 ஏக்கர் நிலத்தை பள்ளிக்கும், பள்ளி கமிட்டிக்கும் தானமாக எழுதி கொடுத்துள்ளார்‌. இது தொடர்பாக 15-10-1957-ல் கரூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பின்பு பள்ளியின் கமிட்டி தலைவராக இருந்த சுப்பையன் மகன் முருகையன் கடந்த 2023 ஆம் ஆண்டு காலமாகிவிட்டார். அரசுத்துறை அதிகாரிகள் அந்த நிலத்தை முதன்மை கல்வி அலுவலர் பெயருக்கு பட்டா மாற்றம் செய்து கையகப்படுத்த தவறி விட்டனர், ஆயினும் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்களும், ஊர் பொதுமக்களும் பள்ளியில் பயிலும் 500க்கும் மேற்பட்ட மாணாக்கர்களுக்கு தேவையான விளையாட்டு மைதானம் அமைத்து தர அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அரசு தரப்பில் மேற்கண்ட பள்ளி நிலமானது காலமான முருகையின் பெயரில் இருப்பதை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பெயருக்கு பட்டா மாற்றம் செய்தால் தான் அரசால் வழங்கப்படும் பள்ளிக்கு உண்டான சலுகைகள் செய்ய ஏற்பாடு செய்ய இயலும் என தெரிவித்தனர். பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு ஆவணங்களை பெயர் மாற்றம் செய்துள்ளனர். இப்போதும், அரசுத்துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதால், அந்த நிலத்தை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பெயருக்கு பட்டா மாற்றம் செய்ய வேண்டி இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இது தொடர்பாக பள்ளி மேலாண்மை குழு தலைவர் தங்கமணி தெரிவிக்கும் போது, அரசு அதிகாரிகள் அலட்சியம் காட்டியதால் தான் பள்ளிக்கு கிடைக்க வேண்டிய அரசின் சலுகைகள் கிடைக்காமல் உள்ளது. எனவே, மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று மனு அளிக்க வந்ததாக தெரிவித்தார்.

Similar News