சூரிய மின்சக்தி திட்டத்தில் ஊழல் அதானியை கைது செய்ய வலியுறுத்தி சிபிஎம் நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம்
இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
நாமக்கல் பூங்கா சாலை முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சூரிய மின்சக்தி திட்டத்தில் நடைபெற்றுள்ள ஊழலை கண்டித்தும் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்து ஊழலில் உள்ளிட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தி நாமக்கல் பூங்கா சாலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.சூரிய மின் சக்தி திட்டத்தில் அம்பானியின் ஊழல் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது.நாடாளுமன்ற கூட்டுக்குழு சிபிஐ விசாரணை அமைக்க வேண்டும் மாபெரும் ஊழலில் ஈடுபட்ட அதானியை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி மாநிலம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பூங்கா சாலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.நாமக்கல்லில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.கந்தசாமி.மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ரங்கசாமி, அசோகன்,வேலுசாமி,தங்கமணி,சுரேஷ், கண்ணன்,முருகேசன் மற்றும் மாவட்ட குழு உறுப்பினர்கள் பெருமாள், சக்திவேல், துரைசாமி, ரவி, சின்னசாமி, செல்வராஜ், சரவணன், பழனியம்மாள், ராணி,தேன்மொழி, நர்மதாதேவி, இடைக்கமிட்டி செயலாளர்கள் கந்தசாமி,குணசேகரன்,ரமேஷ், லட்சுமணன், அறிவுடைநம்பிகண்ணன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.