பரமத்தி அங்காள பரமேஸ்வரி கோயில்களில் அமாவாசை பூஜை.

பரமத்தி வேலூர் அடுத்துள்ள பரமத்தி அங்காள பரமேஸ்வரி கோயிலில் அமாவாசை பூஜை சிறப்பாக நடைபெற்றது.;

Update: 2024-11-30 14:57 GMT
பரமத்தி வேலூர், நவ.30: கார்த்திகை மாதம் அமாவாசையை முன்னிட்டு பரமத்தி அங்காள பரமேஸ்வரி கோயிலில் பூஜை நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு பால்,தயிர்,பஞ்சாமிர்தம், மஞ்சள்,திருமஞ்சள்,பன்னீர், இளநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கோயில் குடிப்பாட்டு மக்கள்,ஊர் பொதுமக்கள் சுற்றுவட்டாரை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

Similar News