பரமத்திவேலூர் நாங்கள் இலக்கியம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான பேச்சு போட்டி.

பரமத்திவேலூர் நாங்கள் இலக்கியம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நடைபெற்றது.;

Update: 2024-12-02 15:32 GMT
பரமத்திவேலூர், டிச.2- பரமத்தி வேலூர் நாங்கள் இலக்கியகம் சார்பில் செக்கெழுத்து செம்மல், வீரமங்கை வேலுநாச்சியார் என்ற இருவேறு தலைப்புகளில் அரசு பள்ளி மாணவ, மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி மற்றும் இலக்கியச் சொற்பொழிவு நிகழ்ச்சி சனிக்கிழமை மாலை காந்திஜி மெமோரியல் கிளப்பில் நடைபெற்றது. நாங்கள் இலக்கியத்தின் தலைவர் மருத்துவர் கே.முத்துக்குமார் விழாவிற்கு தலைமை தாங்கினார். செயலாளர் ம.கார்த்திகேயன் வரவேற்று பேசினார். வெற்றியாளர்களுக்கு அரிமா ஆத்மா அமைதி அறக்கட்டளை தலைவர் மருத்துவர் க.நெடுஞ்செழியன் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ,மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினர். நாமக்கல் தமிழ் சங்க நிறுவனர் மருத்துவர் இரா.குழந்தைவேல் தமிழ் என்ன தரும் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். நாமக்கல் மாவட்டம் மைய நூலக வாசகர் வட்ட தலைவர் மா.தில்லைசிவக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அரசு பள்ளி மாணவர்களுக்கான வாய்ப்புகள் குறித்து பேசினார். நாங்கள் இலக்கியத்தின் ஒருங்கிணைப்பாளர் அன்பழகன் அனைவரையும் ஒருங்கிணைத்து பேசினார் நாங்கள் இலக்கியகத்தின் இணைப் பொருளாளர் முத்து கண்ணன் முடிவில் நன்றி கூறினார். விழாவில் அரசு பள்ளி தலைமை ஆசிரிய,ஆசிரியைகள், நாங்கள் இலயக்கியகத்தினர், தமிழ்சங்க அரக்கட்டளையினர், தமிழ் ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News