ஒத்தமாந்துறையில் மது குடிக்க கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வாலிபர் கைது.
ஒத்தமாந்துறையில் மது குடிக்க கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வாலிபர் கைது.
ஒத்தமாந்துறையில் மது குடிக்க கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வாலிபர் கைது. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா சி கூடலூர் கீழ்பாக்கம் அருகே உள்ள அரங்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முருகானந்தம் வயது 37. இவர் டிசம்பர் 2ஆம் தேதி காலை 11:30 மணியளவில் ஒத்தமாந்துறை பகுதியில் உள்ள சக்தி டீ ஸ்டால் கடையில் டீ சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, அங்கு வந்த சின்னதாராபுரம், மேற்கு குடிதெருவை சேர்ந்த தாமஸ் மகன் ஏசுதாஸ் வயது 34 என்பவர், மது குடிக்க முருகானந்தத்திடம் பணம் கேட்டு, கத்தியை காட்டி மிரட்டி, தகாத வார்த்தை பேசி, ரூபாய் 200 பறித்துச் சென்றார். சம்பவம் தொடர்பாக முருகானந்தம் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக ஏசுதாஸை கைது செய்து டிசம்பர் 6ஆம் தேதி வரை சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும்,இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளனர் சின்ன தாராபுரம் காவல் துறையினர்.