கரூரில், மலைவாசல்தலங்களை போல கொட்டி தீர்த்த பனியால் வாகன ஓட்டிகள் அவதி. இயற்கை ஆர்வலர்கள் வியப்பு.
கரூரில், மலைவாசல்தலங்களை போல கொட்டி தீர்த்த பனியால் வாகன ஓட்டிகள் அவதி. இயற்கை ஆர்வலர்கள் வியப்பு.
கரூரில், மலைவாசல்தலங்களை போல கொட்டி தீர்த்த பனியால் வாகன ஓட்டிகள் அவதி. இயற்கை ஆர்வலர்கள் வியப்பு. வங்கக்கடலில் ஏற்பட்ட பெஞ்சல் புயலால் தமிழக முழுவதும் மழை கொட்டி தீர்த்தது. இதனால் விழுப்புரம், புதுச்சேரி, கிருஷ்ணகிரி, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்ததால் விளைநிலங்களிலும், வீடுகளுக்குள்ளும் புகுந்த மழை நீரால் பாதிப்பு ஏற்பட்டது. வெள்ள நிவாரண பணிகளை தமிழக அரசு தொடர்ந்து மேற்கொண்டு வரும் சூழலில், இன்னும் பணிகளை முடிக்காத நிலையில், மீண்டும் வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டு, புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது எனவும், இதனால் டிசம்பர் 12ஆம் தேதி வரை மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் நேற்று அறிவிப்பு செய்தது. இதனால் இரண்டாவது கனமழைக்கு அரசும் பொதுமக்களும் தயாராகும் வேலையில், இன்று அதிகாலை முதலே ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற மலைவாசஸ் ஸ்தலங்களில் ஏற்படும் பனிப்பொழிவு போல, கரூர் மாவட்டத்தில் பரவலாக அனைத்து பகுதிகளிலும் பனிப்பொழிவு பொழிந்ததால் தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய வைத்தவாறு சென்றனர். அதேசமயம் இயற்கை ஆர்வலர்களும், சமூக ஆர்வலர்களும் இந்த வருடத்தின் முதல் பணி பொழிவை கண்டு ரசித்ததோடு பனிப்பொழிவை வியப்பாக பார்த்தனர்.