திருச்செங்கோடு அருகே சாலை விபத்து இரண்டு கல்லூரி மாணவர்கள் பலி
திருச்செங்கோடு அருகே சாலை விபத்து இரண்டு கல்லூரி மாணவர்கள் பலி;
திருச்செங்கோடு ராசிபுரம் ரோட்டில் நல்லாம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே பாக்கு மட்டை தயாரிக்கும் நிறுவனம் அருகில் ராசிபுரத்தில் இருந்து யமஹா எம்டி மோட்டார் சைக்கிளில் வந்த கே எஸ் ஆர் கல்லூரியில் பி. டெக்.. முதலாம் ஆண்டு படிக்கும் பேளுக்குறிச்சி அருகில் உள்ள மலைவேப்பங் குட்டை பகுதியைச் சேர்ந்த பூந்தமிழன் 20 ராசிபுரத்தைச் சேர்ந்த ராகுல்20 ஆகியோர் ஒன்றாக கல்லூரிக்கு வரும்போது எதிரில் வந்த பவானியில் இருந்து ராசிபுரம் நோக்கி செல்லும் எஸ்.வி.ஏ பேருந்து மீது மோதிய விபத்தில் கல்லூரி மாணவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே பலி சம்பவம் குறித்து எலச்சிபாளையம் போலீசார் விசாரணை. மேற்படி இறந்து போன நபர்களில் பூந்தமிழன் என்பவர் KSR தனியார் கல்லூரியில் IT படித்து வருவதாகவும் தனது நண்பர் ராகுல் ஆண்டலூர்கேட் அரசு கல்லூரியில் படித்து வருவதாகவும் தெரிய வருகிறது. சம்பவம் நேரத்தில் சம்பவ இடத்தில் yamaha MT என்ற இருசக்கர வாகனத்தில் வந்தபோது எதிரே வந்த SVS தனியார் பேருந்து மீது மோதி இருவரும் சம்பவ இடத்திலேயே முகம் சிதைந்து இறந்து விட்டனர். ஊரக போலீசார் பிரேதத்தை கைப்பற்றி திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்