மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 11 பயனாளிகளுக்கு ரூ.93,400/- மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.;

Update: 2025-12-22 12:28 GMT

மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 476 மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் பொதுமக்கள் வழங்கினார்கள். மனுக்களைப் பெற்று கொண்ட மாவட்ட  ஆட்சியர்    மனுக்களை பரிசீலினை செய்து உரிய அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.தொடர்ந்து, மாவட்ட  ஆட்சியர்  மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 7 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.66,500/- மதிப்பில் மூளை பக்கவாதத்திற்கான சக்கர நாற்காலி (C.P.Wheel Chair) மற்றும் 4 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.26,900/- மதிப்பில் மூளை வளர்ச்சி குறைபாடுள்ள குழந்தைகளுக்கான சிறப்பு இருக்கை (Corner Seat) 11 பயனாளிகளுக்கு ரூ.93,400/- மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வருகை தரும் பொதுமக்களுக்கு ரெட்கிராஸ் சங்கம் சார்பில் தன்னார்வலர்கள் மூலம் 12 வருடங்களாக இலவசமாக மனுக்கள் எழுதி தரப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து, மாவட்ட  ஆட்சியர்  ஸ்ரீ கோகுல்நாதா மிஷன்ஸ் கல்லூரி மற்றும் விவேகானந்தா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இளம் ரெட்கிராஸ் மாணவியர்கள் மற்றும் கல்லூரி நிர்வாக இயக்குநர், முதல்வரை பாராட்டி பாராட்டுச்சான்றிதழ்களை வழங்கினார்.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.க.சரவணன், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி)  சு.சுந்தரராஜன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்   எஸ்.கலைச்செல்வி, ரெட்கிராஸ் செயலர்  சி.ஆர்.ராஜேஸ்கண்ணன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

Similar News