கரூரில்,அரசியலமைப்பை உருவாக்கிய அம்பேத்கருக்கு பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் வீரவணக்கம் செலுத்தினர்.
கரூரில்,அரசியலமைப்பை உருவாக்கிய அம்பேத்கருக்கு பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் வீரவணக்கம் செலுத்தினர்.
கரூரில்,அரசியலமைப்பை உருவாக்கிய அம்பேத்கருக்கு பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் வீரவணக்கம் செலுத்தினர். இந்திய அரசியலமைப்பை உருவாக்கித் தந்த அண்ணல் அம்பேத்கரின் 68-வது நினைவு தினம் இன்று. நாடு முழுவதும் உள்ள அம்பேத்கர் கொள்கை பிடிப்பாளர்களும், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும், பல்வேறு அரசியல் கட்சியைச் சேர்ந்த தலைவர்களும், நிர்வாகிகளும் இன்று அவருக்கு புகழ் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக கரூர் பேருந்து நிலையம் எதிரில், பகுஜன் சமாஜ் கட்சி கரூர் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ராமச்சந்திரன் தலைமையில் மறைந்த தலைவருக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக அமைக்கப்பட்ட மேடையில், அண்ணல் அம்பேத்கரின் திரு உருவப்படத்தை அமைத்து, மலர் மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செய்தனர். இதனைத் தொடர்ந்து அம்பேத்கருக்கு வீரவணக்கம் செய்து முழக்கம் எழுப்பினர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் அன்பழகன், மாவட்ட துணை தலைவர் தங்கம், மாவட்ட பொது செயலாளர் தஸ்வீன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மதுரை வீரன், ஜெயகோபால், பொருளாளர் ராமச்சந்திரன், இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் மணிவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்த வீர வணக்க நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக மாநில துணை தலைவர் இளமான் சேகர், மாநில செயலாளர்கள் மலையப்பன், திருமாறன், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு மறைந்த தங்கள் இனமான தலைவருக்கு வீர வணக்கம் செலுத்தினர்.