புகலூர்- சர்க்கரை ஆலையில் பணியின் போது மயங்கி விழுந்த இளைஞர் உயிரிழப்பு.
புகலூர்- சர்க்கரை ஆலையில் பணியின் போது மயங்கி விழுந்த இளைஞர் உயிரிழப்பு.
புகலூர்- சர்க்கரை ஆலையில் பணியின் போது மயங்கி விழுந்த இளைஞர் உயிரிழப்பு. கரூர் மாவட்டம், புகலூர் தாலுகா, கிழக்கு தவிட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சிவதேவன் மகன் ஹரிராமன் வயது 29. இவர் புகலூர் பகுதியில் செயல்படும் இ ஐ டி பாரி சர்க்கரை ஆலையில் ஒப்பந்த தொழிலாளியாக வெல்லம் சேகரிக்கும் பிரிவில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் வழக்கம்போல் டிசம்பர் 5ஆம் தேதி மதியம் 2:15 மணி அளவில் பணியில் இருந்த ஹரிராமனுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் கீழே விழுந்தார். உடனே ஆலையில் உள்ள சக தொழிலாளர்கள் அவரை மீட்டு வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள், ஹரிராமன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அறிந்த ஹரிராமனின் தந்தை சிவதேவன் வயது 55 என்பவர், இது தொடர்பாக காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், உயிரிழந்த ஹரிராமன் உடலை உடற்கூறு ஆய்வுக்காக,அதே மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.