நெல் ஜெயராமன் நினைவு நாளில் காவேரி கூக்குரல் மூலம் மரக்கன்று நடவு*
நெல் ஜெயராமன் நினைவு நாளில் காவேரி கூக்குரல் மூலம் மரக்கன்று நடவு*
கரூர் நெல் ஜெயராமன் நினைவு நாளில் காவேரி கூக்குரல் மூலம் மரக்கன்று நடவு நெல் ஜெயராமன் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் 74 ஆயிரம் மரக்கன்றுகள் விவசாய நிலங்களில் நடப்பட்டது. பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த நெல் ஜெயராமன் அவர்களின் நினைவு நாள் டிசம்பர் 6ந் தேதி சுற்றுச்சூழல் ஆர்வலர்களால் கொண்டாடப்படுகிறது, நெல் ஜெயராமன் சார்பில் நமது நெல்லை காப்போம் இயக்கத்தின் மூலம் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுப்பதிலும், பாரம்பரிய விவசாயத்தை பரவலாக்குவதிலும் தீவிரமாக தன்னை அதிகமாக ஈடுபடுத்திக் கொண்டார். திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியை அடுத்த கட்டிமேடு கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்த ஜெயராமன் ஆரம்ப காலங்களில் நம்மாழ்வாரிடன் டெல்டா மாவட்ட சுற்றுப்பயணங்களில் இணைந்து பணியாற்றியவர். நம்மாழ்வார் விடம் இயற்கை விவசாயிகள் கொடுத்த பாரம்பரிய நெல்ரகங்களை, மறுஉற்பத்தி செய்வதில் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டவர், தொடர்ந்து பாரம்பரிய நெல் ரகங்களை கண்டறிவதிலும், மறுஉற்பத்தி செய்வதிலும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். அவரது சீரிய முயற்சியால், 174 பாரம்பரிய நெல் ரகங்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் பாரம்பரிய நெல் ரகங்கள் குறித்த விழிப்புணர்வை விவசாயிகளிடையே ஏற்படுத்தியலும், இயற்கை விவசாயிகளுக்கு வழிகாட்டும் விதமாக ஆதிரெங்கம் கிராமத்தில் பாரம்பரிய நெல் மையத்தை உருவாக்கியதிலும் பெரும் பங்காற்றியவர். நெல் ஜெயராமன் ஈஷாவின் விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் நிகழ்வுகளில் அதிக ஈடுபாடுகொண்டவர். ஈஷாவின் ஆரம்பகட்ட இயக்கமான பசுமைக் கரங்கள் திட்டத்துடன் இணைந்து 10,000க்கும் மேற்பட்ட டிம்பர் மரக்கன்றுகளை உருவாக்கி விவசாயிகளுக்கு வழங்கியவர். அவரின் எண்ணங்களை நடைமுறைப்படுத்தும் விதமாக ஈஷா மரம் நடும் பணிகளையும், இயற்கை விவசாயப் பணிகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்ட ஈஷா காவேரி கூக்குரல் கள ஒருங்கிணைப்பாளர் ஐயப்பன் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் ராமசந்திரன் மாவட்ட பொறுப்பாளர் சரவணன் ஆகியோர் ஏற்பாட்டில் கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டம் முனையனுர் கிராமத்தில் முன்னோடி விவசாயி ஜெகநாதன் விவசாய நிலத்தில் அருள்குமார் ஒன்றிய சுகாதாரத் துறை கள ஆய்வாளர் தலைமையில் சுமார் 1500 மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி துவங்கப்பட்டது. இதில் விவசாயிகள் பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனார் விவசாயிகள் சாதாரணமாக சாகுபடி செய்யும் மற்ற பயிர்களோடு வேலியோரங்களில் டிம்பர் மரங்களை வளர்ப்பதினால் கூடுதல் வருமானம் பெறலாம். தேக்கு, மலைவேம்பு, கருமருது, வேங்கை, மஞ்சள் கடம்பு, சந்தனம், செஞ்சந்தனம், குமிழ், மகாகனி போன்ற விலை மதிப்பு மிக்க டிம்பர் மரங்கள் வளர்க்க உகந்தவை. மேலும் மரங்களில் மிளகு சாகுபடி செய்வதின் மூலம் தொடர் வருமானமும் விவசாயிக்கு கிடைக்கும். தமிழகம் முழுவதும் உள்ள 50 ஈஷா நர்சரிகள் மூலம் டிம்பர் மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு 3 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. தற்போது தேவையான மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு ஈஷா நர்சரிகளில் தயாராக உள்ளது. மரக்கன்றுகள் பெற 80009 80009 எண்ணை தொடர்பு கொள்ளலாம்.