லாரி கார் மோதிய விபத்தில் நான்கு பேர் படுகாயம்
லாரி கார் மோதிய விபத்தில் நான்கு பேர் படுகாயம்;

மதுராந்தகம் அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் லாரி கார் மோதல் 4 பேர் காயம் போக்குவரத்து பாதிப்பு. செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கள்ளபிரான்புரம் என்ற இடத்தில் சென்னையிலிருந்து திண்டிவனம் நோக்கி சென்ற லாரி வேகமாக சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து உடன் வந்த கார் மீது ஒன்றோடு ஒன்று மோதி சாலை நடுவே உள்ள தடுப்புச் சுவர் மீது ஏரி மரத்தில் மோதியதில் கார் பலத்த சேதம் அடைந்தது..அதில் காரில் பயணம் செய்த நான்கு பேர் காயம் அடைந்தனர். அவர்களை உடனடியாக மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.இதனால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது சம்பவ இடத்திற்கு வந்த மதுராந்தகம் போலீசார் போக்குவரத்து சீர் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.