பத்தோடு பதினொன்றாக வெளிநாடு சென்று வந்த அண்ணாமலைக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் அளிப்பது ஏன்? கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி.

பத்தோடு பதினொன்றாக வெளிநாடு சென்று வந்த அண்ணாமலைக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் அளிப்பது ஏன்? கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி.

Update: 2024-12-08 10:49 GMT
பத்தோடு பதினொன்றாக வெளிநாடு சென்று வந்த அண்ணாமலைக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் அளிப்பது ஏன்? கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு வார்டுகளில் வசிக்கும் பொதுமக்களிடம் அவர்களது குறைகள் குறித்து மனுக்கள் பெறும் நிகழ்ச்சி இன்று கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற தமிழக மின்சாரம் மற்றும் ஆயதீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் அண்ணாமலை குறித்து கேட்ட கேள்விக்கு, வெளிநாட்டிற்கு பத்தோடு பதினொன்றாக சென்ற அண்ணாமலைக்கு ஊடகங்கள் இத்தனை முக்கியத்துவம் அளிப்பது ஏன்? எனவும், அந்த பதினோரு பேரில் ஐஏஎஸ்,ஐபிஎஸ், மற்றும் செய்தியாளர்கள் சென்று வந்துள்ளனர். அவர்கள் குறித்து ஊடகங்களில் கண்டு கொள்ளாமல் மக்களிடம் செல்வாக்கு இல்லாத அண்ணாமலை குறித்து ஊடகங்கள் முக்கியத்துவம் அளித்து செய்திகள் வெளியிடுவதின் நோக்கம் என்ன? என கேள்வி எழுப்பினார்.

Similar News