வ உ சி தெருவில் மகன் இறந்த தூக்கம் தாளாமல் மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டு தற்கொலை செய்து கொண்ட தந்தை.
வ உ சி தெருவில் மகன் இறந்த தூக்கம் தாளாமல் மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டு தற்கொலை செய்து கொண்ட தந்தை.
வ உ சி தெருவில் மகன் இறந்த தூக்கம் தாளாமல் மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டு தற்கொலை செய்து கொண்ட தந்தை. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வ உ சி முதல் தெருவை சேர்ந்தவர் டோமினிக் சேவியர் வயது 58. இவர் அப்பகுதியில் டீக்கடை நடத்தி வந்தார். இந்நிலையில் இவரது மகன் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு திடீரென உயிரிழந்து விட்டார். அன்றையிலிருந்து மகனை இழந்த டோமினிக் சேவியர் விரக்தியில் வாழ்ந்து வந்தார். இதனிடையே டிசம்பர் 6ஆம் தேதி அதிகாலை 5:30- மணி அளவில், அவரது டீக்கடையில் தனக்குத் தாமே மண்ணெண்னை ஊற்றி தீயிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அறிந்த டோமினிக் சேவியரின் மனைவி தமிழரசி வயது 54 என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், உயிரிழந்த டோமினிக் சேவியரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் கரூர் மாநகர காவல் துறையினர்.