களத்தூர் மயானம் அருகே டூ வீலர் டிராக்டர் நேருக்கு நேர் மோதல். ஒருவர் படுகாயம்.
களத்தூர் மயானம் அருகே டூ வீலர் டிராக்டர் நேருக்கு நேர் மோதல். ஒருவர் படுகாயம்.
களத்தூர் மயானம் அருகே டூ வீலர் டிராக்டர் நேருக்கு நேர் மோதல். ஒருவர் படுகாயம். கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா, பாலவிடுதி அருகே உள்ள செங்காட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர் வயது 45. இவர் டிசம்பர் 6ஆம் தேதி மாலை 6:30 மணி அளவில், மோளப்பட்டியில் இருந்து பாலவிடுதி செல்லும் சாலையில் அவரது எலக்ட்ரிக் டூவீலரில் சென்று கொண்டிருந்தார். இவரது வாகனம் களத்தூர் பகுதியில் உள்ள மயானம் அருகே சென்ற போது, எதிர் திசையில் கடவூர் தாலுக்கா, ஆதனூர் அருகே உள்ள செங்காட்டூர் பகுதியைச் சேர்ந்த நடராஜன் வயது 31 என்பவர் டேங்கர் உடன் கூடிய டிராக்டரை எதிர் திசையில் வேகமாக ஓட்டி வந்து, பாஸ்கர் ஓட்டிச் சென்ற டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த பாஸ்கரை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதியில் செயல்படும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அறிந்த பாஸ்கரின் மனைவி தேன்மொழி வயது 35 என்பவர் இது குறித்து காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் டிராக்டரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய நடராஜன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் பாலவிடுதி காவல்துறையினர்.