குடிக்க பணம் தராததால் ஆத்திரத்தில் பாட்டியை அடித்து கொலை செய்த பாசக்கார பேரன்

விருத்தாசலம் அருகே பரபரப்பு;

Update: 2024-12-08 17:45 GMT
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கட்சி பெருமாநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மனைவி முத்துக்கண்ணு (வயது 80). இவர் சாத்தியம் அருகே உள்ள குள்ளமணிகாடு பகுதியில் வயலில் தங்கி இருந்தார். அப்போது இவரது மகன் சந்திரகாசு டீ வாங்குவதற்காக கடைக்கு சென்றதாக கூறப்படுகிறது.  அப்போது அங்கு வந்த சந்திரகாசு மகன் வேல்முருகன் (30) என்பவர் தன்னுடைய பாட்டி முத்துக்கண்ணு விடம்  குடிக்க பணம் கேட்டுள்ளார். அவர் தர மறுத்ததால் அவர் அணிந்திருந்த நகைகளை கேட்டுள்ளார் அதனையும் தர மறுத்ததால் அப்போது ஏற்பட்ட பிரச்சனையில் தன்னுடைய பாட்டி முத்துக்கண்ணுவை மண்டையில் அடித்துக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார். அப்போது அங்கு வந்த சந்திரகாசு தன்னுடைய தாய் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த  விருத்தாசலம் போலீசார் விரைந்து சென்று முத்துக்கண்ணு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து கொலை செய்துவிட்டு தப்பிச்சென்ற வேல்முருகனை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News