திண்ணப்பா நகரில் அதிகப்படியான தலைவலியால் திருமணம் ஆன இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை.
திண்ணப்பா நகரில் அதிகப்படியான தலைவலியால் திருமணம் ஆன இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை.
திண்ணப்பா நகரில் அதிகப்படியான தலைவலியால் திருமணம் ஆன இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை. கரூர் மாவட்டம், தெற்கு காந்திகிராமம், திண்ணப்பா நகர், 4-வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் மனைவி கார்த்திகா வயது 26. இவர்கள் இருவருக்கும் கடந்த 2024 மார்ச் 24ஆம் தேதி திருமணம் ஆனது. இவர்களுக்கு ஆதிரன் என்ற ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சந்தோஷ் கடந்த 3- மாதங்களுக்கு முன்பு துபாய் நாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார். கடந்த சில நாட்களாகவே கார்த்திகாவுக்கு அதிகப்படியான தலைவலி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் டிசம்பர் 6ஆம் தேதி இரவு 10 மணி முதல் டிசம்பர் 7ஆம் தேதி காலை 7 மணி வரையிலான இடைப்பட்ட நேரத்தில் தாங்க முடியாத தலைவலியால் அவரது வீட்டில் கார்த்திகா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கார்த்திகாவின் தாயார் ஜெயலட்சுமி வயது 54 என்பவர்,காலையில் எழுந்து பார்த்தபோது, கார்த்திகா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மேலும், சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்கு அளித்த புகாரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த கார்த்திகாவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தாந்தோணிமலை காவல்துறையினர்.