ஊனமலை கிராமத்தில் ஸ்ரீ ஐயப்பன் திருவீதி உலா
ஊனமலை கிராமத்தில் ஸ்ரீ ஐயப்பன் திருவீதி உலா;
செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் அருகே உள்ள ஊனமலை கிராமத்தில் கார்த்திகை மாதத்தை முன்னிட்டு ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பன் தேவாலய அறக்கட்டளை சார்பில் ஸ்ரீ ஐயப்பன் திருவீதி உலா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் இந்த ஆண்டு ஸ்ரீ ஐயப்பன் திருவீதி உலா அறக்கட்டளையின் செயலாளர் சிலம்பரசன் தலைமையில் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட ஐயப்பன் பக்தர்கள் கலந்து கொண்டு ஐயப்பன் பாடல்களை பாடியும்,வானவேடிக்கை, செண்டை மேளங்கள் முழங்க மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ ஐயப்பன் தேரில் எழுந்தருளி முக்கிய விதிகள் வழியாக உலா வந்தார். இந்த நிகழ்ச்சியில் கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.