மதுரை மாவட்டம் மேலூர் அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அனுமதி ஏல உத்தரவை ஒன்றிய அரசு ரத்து செய்ய இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநில குழ கூட்டத்தில் தீர்மானம்.
மதுரை மாவட்டம் மேலூர் அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அனுமதி ஏல உத்தரவை ஒன்றிய அரசு ரத்து செய்ய இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநில குழ கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது..;
அரியலூர், டிச.8- மதுரை மாவட்டம் மேலூர் அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அனுமதி ஏல உத்தரவை ஒன்றிய அரசு ரத்து செய்ய வலியுறுத்தி அரியலூரில் நடைபெற்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநில குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. . இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம் சனிக்கிழமை அரியலூர் தனியார் திருமண மண்டபத்தில் மாநில தலைவர் கார்த்திக் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில செயலாளர் சிங்காரவேலன், மாநில பொருளாளர் பாரதி, மாநில இணை செயலாளர் செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.முன்னதாக அரியலூர் மாவட்ட செயலாளர் துரைஅருணன் வரவேற்று பேசினார்.முடிவில் மாவட்ட தலைவர் ரவீந்திரன் நன்றி கூறினார். கூட்டத்தில் மாநில செயற்குழு மாநிலக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஒன்றிய அரசு மதுரை மாவட்டம் மேலூர் அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அனுமதித்திருக்கிறது . அந்த அனுமதியை ஏல உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத அரிய வகை நிலம் அரிட்டாபட்டி நிலம் இங்கே 3500 ஆண்டுகளுக்கு முந்தைய பெருங்கற்கால படுக்கை இருக்கிறது. 2200 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழி கல்வெட்டு இருக்கிறது. 2000 ஆண்டுகளுக்கு முந்தைய சமணச் சிற்பம் இருக்கிறது. 1200 ஆண்டுகளுக்கு முந்தைய முற்காலப் பாண்டியர்கள் கட்டிய சிவன் குடைவரைக் கோவில் இருக்கிறது. 800 ஆண்டுகளுக்கு முன்பு பிற்காலப் பாண்டியர்கள் அமைத்த ஏரி இருக்கிறது. வரலாறு முழுக்கத் தனது மேனியில் வரலாற்றுச் சின்னங்களை ஏந்தியிருக்கிற அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கிற ஒன்றிய அரசின் முடிவு கைவிடப்பட வேண்டும், கீழடியிலே பத்து அடி குழி தோண்ட தொல்லியல் துறைக்கு அனுமதி கொடுக்காத ஒன்றிய அரசு இன்றைக்கு தொல்லியல் சின்னங்கள் நிறைந்த அரிட்டாபட்டியில் பல நூறு கிலோமீட்டர் சுரங்கம் அமைக்க அனுமதி கொடுக்கிறது என்றால் தமிழ்நாட்டினுடைய வளத்தையும் வரலாற்றையும் ஒருசேர அழிக்கிற இந்த முயற்சி. அங்கே இருக்கிற அனைத்து கிராமங்களிலும் இதை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது, டங்க்ஸ்டன் சுரங்கம் அமைக்கிற இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டிருக்கிற அனுமதியை ஒன்றிய அரசு ரத்து செய்ய வேண்டும், அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிமெண்ட் ஆலைகளில் உள்ளூரில் உள்ள படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுக்க வேண்டும், அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிமெண்ட் ஆலைகளுக்கு செல்லும் கனரக வாகனங்கள் செல்ல தனிச்சாலை அமைத்திட வேண்டும், கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் அருகேயுள்ள முனிவாழை கிராமம், மிகவும் பிற்படுத்தப்பட்ட வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த விஜயகுமார் (25) என்பவரும், திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை பிற்படுத்தப்பட்ட நாடார் சமூகத்தைச் சேர்ந்த ஜெனிபர் சரோஜா(23) என்பவரும் இன்ஸ்டாகிராம் வழியாக அறிமுகமாகி கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.விஜயகுமார் சிமெண்ட் தொழிற்சாலையிலும், ஜெனிபர் சரோஜா தனியார் நிறுவனத்திலும் வேலை செய்து வருகின்றனர்.பெண்ணின் குடும்பத்தினர் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் 02.11.2024 அன்று திருநெல்வேலிக்கு விஜயகுமாரை வரவழைத்து ஜெனிபரின் சகோதரர் புஷ்பராஜ் தனது நண்பரின் வீட்டிற்கு அழைத்துச் சென்று ஆயுதங்களால் தாக்கி படுகொலை செய்துள்ளார். இந்தக் கொடூரமான குற்றவாளிகள் சட்டப்படி தண்டிக்கப்படுவதற்கு உறுதியான நடவடிக்கைகளை அரசும், காவல்துறையும் மேற்கொள்ள வேண்டும். ஆணவக் கொலைகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. எனவே ஆணவப்படுகொலைகளைத் தடுத்திட தனிச் சட்டத்தை இயற்றிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.