பரமத்தி வேலூர் அருகே மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனங்கள் பறிமுதல்.

பரமத்தி வேலூர் அருகே மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனங்கள் பறிமுதல் 2 பேர் தப்பி ஓட்டம்.;

Update: 2024-12-09 15:45 GMT
பரமத்திவேலூர், டிச .9: நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பாண்டமங்கலம் அருகே உள்ள பொன்மலர்பாளையம் மற்றும் திட்டமேடு காவிரி அருகே காவிரி ஆற்றில் இருந்து சட்ட விரோதமாக மணல் கடத்துவதாக பரமத்தி வேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணனுக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்படி வேலூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் மணலை மூட்டைகளாக கட்ட வந்த இருசக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தினர். போலீசாரை பார்த்ததும் மணல் கடத்த வந்தவர்கள் அங்கிருந்த மணலுடன் இருசக்கர வாகனத்தையும் அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடினர். இதனையடுத்து போலீசார் 2 இருசக்கர வாகனங்கள் மற்றும் மணல் மூட்டைகளை கைப்பற்றி தப்பியோடியவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News