நல்லூர் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்.
நல்லூர் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் மின்சார வாரிய அறிவிப்பு.;
பரமத்திவேலூர், டிச.9: பரமத்தி வேலூர் தாலுகா நல்லூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (10- -ந் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை - மேற்கொள்ள இருப்பதால் மேற்கண்ட துணை மின் - நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான •நல்லூர், கந்தம்பாளையம், மணியனூர், வைரம்பாளையம், கோலாரம், ராமதேவம், கொண்ட ரசம்பாளையம், கவுண்டிபாளையம், சுள்ளிப்பாளையம், நடந்தை, திடுமல்,தி. கவுண்டம்பாளையம், நகப்பாளையம், சிராப்பள்ளி, குன்னமலை, மேல் சாத்தம்பூர், சித்தாளந்தூர், பெருங்குறிச்சி ஆகிய ஊர்களுக்கும், மேலும் மேற்கண்ட துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெரும் இதர பகுதிகளுக்கும் மின் வினியோகம் இருக்காது என பரமத்தி வேலூர் மின்வாரிய செயற்பொறியாளர் வரதராஜன் தெரிவித்துள்ளார்.