முகையூர் தாலுகாவில், பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் நிவாரண உதவி பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அரகண்டநல்லுாரில் நடந்த நிகழ்ச்சிக்கு, முகையூர் வட்டார செயலாளர் தோமினிக் சேவியர் வரவேற்றார். மாநில பொருளாளர் தியாகராஜன், மாவட்ட செயலாளர் ரமேஷ், வைத்திமுருகன் முன்னிலை வகித்தனர்.சிறப்பு விருந்தினர் மாநில பொதுச் செயலாளர் தாஸ், பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு போர்வை, வேட்டி, சேலை, அரிசி மற்றும் மாணவர்களுக்கு சீருடை உள்ளிட்ட நிவாரண உதவி பொருட்களை வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர்கள் வசந்த ராமன், ஜேம்ஸ், ராஜேந்திரன், பிந்து மாதவன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.