சோனியாகாந்தி பிறந்த நாள் கொண்டாட்டம்

சோனியா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு கட்சியினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிக் கொண்டாடினர்.;

Update: 2024-12-10 07:35 GMT
அரியலூர், டிச.10 காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி பிறந்த நாளையொட்டி அரியலூர் மாவட்டத்தில் அக்கட்சியினர் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி திங்கள்கிழமை கொண்டாடினர். அரியலூர் செட்டி ஏரிக்கரையிலுள்ள மகாத்மா காந்தி மற்றும் காமராஜர் சிலைகளுக்கு அரியலூர் நகர காங்கிரஸ் தலைவர் மா.மு.சிவகுமார் , மூத்த தலைவர் சீனி.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து வடக்கு வட்டாரத் தலைவர் கர்ணன் கட்சி கொடியை ஏற்றி வைத்கதார். மாவட்டச் செயலர் ரவிச்சந்திரன் சோனியாகாந்தி குறித்து சிறப்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து அக்கட்சியினர் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர். நிகழ்ச்சியில் மாவட்ட துணைத் தலைவர் பழனிச்சாமி,  நகர துணைத் தலைவர்கள் சுப்பிரமணியன், வரதராஜன், நகர செயலர் செந்தில்வேல் கொளஞ்சிநாதன், பொருளாளர் சங்கர் தொழிற்சங்க தலைவர் ரங்கராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News