குன்னூரில் குட்டியுடன் சென்ற காட்டெருமையின் பின்னால் ஹாயாக நடந்து வந்த சிறுத்தை .....

குன்னூரில் குட்டியுடன் சென்ற காட்டெருமையின் பின்னால் ஹாயாக நடந்து வந்த சிறுத்தை .....;

Update: 2024-12-10 13:18 GMT
குன்னூரில் குட்டியுடன் சென்ற காட்டெருமையின் பின்னால் ஹாயாக நடந்து வந்த சிறுத்தை ..... குன்னூர் மற்றும் அதன் சுற்று பகுதிகளில் சமீப நாட்களாக சிறுத்தை மற்றும் காட்டெருமை கரடிகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது உணவு குடிநீர் தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் உலா வரும் வனவிலங்குகளால் மக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர் இந்த நிலையில் குன்னூர் அட்டடி பகுதியில் பிறந்து ஒரு சில நாட்களே ஆன குட்டியுடன் காட்டெருமை ஒன்று மெதுவாக நடந்து வந்தது அதன் பின்பு சிறிது நேரம் கழித்து சிறுத்தை ஒன்றும் அதே சாலையில் உணவை நோட்டமிட்டு மெதுவாக நடந்து வந்தது இந்த காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள நிலையில் மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர் தொடர்ந்து வனவிலங்குகள் நடமாடி வருவதால் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News