நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.;
அரியலூர்,டிச.10 - அரியலூரில் மாவட்ட உணவுப் பொருள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆட்சியர் பொ.ரத்தினசாமி பேரணியை கொடியசைத்து தொடக்கி வைத்தார்.பேரணியானது, அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், பல்துறை அலுவலக வளாகம், நகராட்சி அலுவலகம் வழியாக சென்று அரியலூர் அண்ணாசிலை அருகில் நிறைவடைந்தது.பேரணியில் கலந்து கொண்ட அரசுப் பள்ளி மாணவ,மாணவிகள், உணவே மருந்து உடலே பிரதானம், விளப்பரத்துக்கு மயங்காதே விழிப்புணர்வை இழக்காதே , வளமான எதிர்காலத்துக்கு பொறுப்பான நுகர்வு, தரம் மந்திரம் வெற்றியின் தந்திரம் என்பன உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு, முழக்கமிட்டுச் சென்றனர்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ம.ச.கலைவாணி, மாவட்ட வழங்கல் அலுவலர் ராமலிங்கம், தனித் துணை ஆட்சியர் கீதா, அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் மணிகண்டன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவானந்தன், அரியலூர் வட்டாட்சியர் முத்துலெட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.