மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்பு
மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்க்கப்பட்டது.;
அரியலூர், டிச.10 - மனித உரிமைகள் தினத்தையொட்டி அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் தலைமையில், மாவட்ட வருவாய் அலுவலர் ம.ச.கலைவாணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆ.ரா.சிவராமன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பரிமளம் மற்றும் மாவட்ட நிலை அலுவலர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.