காஞ்சிபுரத்தில் புகை மண்டலமான மிலிட்டரி சாலை
சாலையோரம் கிடந்த பழுதடைந்த 'பிரிஜ்' எனப்படும் குளிர்சாதன பெட்டிக்கு, மர்மநபர்கள் தீ வைத்துள்ளனர்;
சின்ன காஞ்சி புரம் பெரியார் நகரில் இருந்து, ஓரிக்கை, செவிலிமேடு வரையுள்ள மிலிட்டரி சாலை, புறவழிசாலையாக இருந்து வருகிறது. கனரக வாகன போக்குவரத்து அதிகம் உள்ள சாலையோரம் கிடந்த பழுதடைந்த 'பிரிஜ்' எனப்படும் குளிர்சாதன பெட்டிக்கு, நேற்று மர்மநபர்கள் தீ வைத்துள்ளனர். இதனால், பிரிஜில் பொருத்தப்பட்டிருந்த தெர்மகோல் எரிந்ததில், சாலையை மறைக்கும் அளவிற்கு புகை வெளியேறியதால், அவ்வழியாக சென்ற பாதசாரிகளுக்கும், இருசக்கர வாகன ஓட்டிகளுக்கும் கண் எரிச்சல் ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் 20 நிமிடங்களுக்கு மேலாக பரபரப்பு ஏற்பட்டது.