மதுராந்தகம் சுற்றுவட்டார பகுதிகளில் திடீர் மழை
மதுராந்தகம் சுற்றுவட்டார பகுதிகளில் திடீர் மழை;

மதுராந்தகம் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக கனமழையானது பெய்து வருகிறது. வங்கக் கடலில் உருவான புதிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக டெல்டா மாவட்டங்களில் அதிக கன மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை செங்கல்பட்டு விழுப்புரம் கடலூர் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையமானது தெரிவித்தது. இதையடுத்து செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம்,அச்சரப்பாக்கம்,மேல்மருவத்தூர், கருங்குழி, படாளம்,தொழுப்பேடு ஆகிய பகுதிகளில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக கனமழையானது பெய்து வருகிறது. இதனால் இப்பகுதிகளில் தற்போது குளிர்ச்சியான சூழல் ஆனது உருவாகியுள்ளது.