ஆன்லைனில் பண மோசடி செய்த கேரளா வாலிபர் கைது.

மதுரை மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலைய போலீசார் ஆன்லைன் மூலம் பண மோசடி செய்த கேரளா வாலிபரை கைது செய்தனர்.

Update: 2024-12-11 16:25 GMT
கடந்த 28.06.2024ம் தேதி மதுரை மாவட்ட சிலைமான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த குமார் (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) என்பவரை Online Part Time Job வேலை தருவதாக கூறி ஏமாற்றி ரூபாய்52,66,417/-ஐ பல்வேறு வங்கிகணக்குகள் மூலமாக பெற்றுக்கொண்டு ஆன்லைன் பணமோசடி செய்த நபர்கள் யாரென்று கண்டுபிடித்து அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து அவர் இழந்த பணத்தை மீட்டுத்தருமாறு கொடுத்த புகாரின் பேரில் மதுரை மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேற்படி சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை கண்டுபிடிக்க சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, வாதி எதிரிகளுக்கு பணம் அனுப்பிய பல்வேறு வங்கி கணக்குகளிலிருந்த இருப்பு பணம் ரூ.76,52,625/- முடக்கம் செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேற்படி குற்றச்சம்பவம் தொடர்பாக வாதி எதிரிகளுக்கு Online Part Time Job வேலைக்காக பணம் அனுப்பிய வங்கி கணக்குகளை பின்தொடர்ந்து புலன் விசாரணை செய்த போது, ஒரு குறிப்பிட்ட வங்கியில் போலியாக நடப்பு வங்கி கணக்கு ஒன்றினை கேரளா காயாம்குளத்தை சேர்ந்த நவ்சத் மகன் அன்வர்சா என்பவர் தொடங்கி அதை கேரளா காசர்கோடுவை சேர்ந்த அப்சல் @ முஜீப் முகமது என்பவரது உதவியுடன் சைபர் கிரைம் குற்றவாளிகள் பொதுமக்களிடம் ஆன்லைன் பணமோசடி செய்வதற்கு உடந்தையாக இருந்ததும், இந்த வங்கி கணக்கு மூலம் கோடி கணக்கில் பணப்பரிவர்த்தனை செய்ததும் விசாரணையில் தெரிய வந்தது. மேற்படி எதிரி அன்வர்சாவை காவல் ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினர் கேரளா மாநிலம் காயாங்குளம் சென்று கைது செய்து அவரிடமிருந்து குற்றச்செயலுக்கு பயன்படுத்திய செல்போன்கள், சிம்கார்டுகள், வங்கி கணக்கு புத்தகங்கள், வங்கி காசோலை புத்தகங்கள் மற்றும் ATM கார்டுகள் ஆகியவற்றை கைப்பற்றி நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். தமிழகத்தின் பல பகுதிகளில் பொதுமக்களை ஆசைவார்த்தை கூறி சைபர் குற்றவாளிகளின் மூலம் ஆன்லைன் பணமோசடி செய்து ரூ.1.8 கோடி வரை பணம் பெற்று ஏமாற்றி கைவரிசை காட்டியிருப்பதும் அதற்கு ரூபாய் ஐம்பதாயிரம் கமிஷன் பணம் பெற்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Similar News