பாரதியார் பிறந்த நாள்  விழா

குமாரபாளையத்தில்  பாரதியார் பிறந்த நாள் விழா  கொண்டாடப்பட்டது.

Update: 2024-12-11 16:43 GMT
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள வேமன் காட்டுவலசு அரசு உயர்நிலைப் பள்ளியில் பாரதியாரின் 143வது  பிறந்த தின விழா தலைமை ஆசிரியை செல்வி தலைமையில் நடந்தது. தமிழ் ஆசிரியர் குமார் வரவேற்றார். பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் காந்தி நாச்சிமுத்து பாரதியார் படத்திற்கு மலர் மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தினார். தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடைபெற்ற பேச்சு போட்டிகளில் வட்டார அளவில் முதலிடம் பெற்று மாவட்ட போட்டிகளில் பங்கு பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவ, மாணவியர்கள்  அனன்யா,  கார்த்திகேயன்,  ஹரிணி ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது. பாரதியார் பாடல் ஒப்பவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. பள்ளி ஆசிரியர்கள் ராதா, முத்து, அருள், தங்கராஜ், முருகேசன், அம்சா, கீதா மாதேஸ்வரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Similar News