பெண்ணாடம் சர்க்கரை ஆலை சார்பில் கொம்பாடிக்குப்பம் கிராமத்தில் ஒருங்கிணைந்த கரும்பு சாகுபடி குறித்த பயிற்சி
விவசாயிகள் பங்கேற்பு
விருத்தாசலம் அடுத்த கொம்பாடிக்குப்பம் கிராமத்தில் பெண்ணாடம் எஸ்என்ஜே அம்பிகா சர்க்கரை ஆலை சார்பில் கரும்பு விவசாயிகள் வயலில் ஒருங்கிணைந்த கரும்பு சாகுபடி குறித்த பயிற்சி கூட்டம் நடந்தது. பொது மேலாளர் திருஞானம் தலைமை தாங்கினார். கரும்பு அலுவலர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். இதில் தனுகா அக்ரி டெக் லிமிடெட் விற்பனை துறை அதிகாரிகள் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த கரும்பு சாகுபடி, களை மற்றும் பூச்சி நோய் கட்டுப்பாடு, ஒரு பரு நாற்றுகள் கொண்டு நடவு செய்வதின் மூலம் ஏற்படும் நன்மைகள், அகல பார் அமைத்து கரும்பு நடவு செய்வதின் நன்மைகள், அதிக தூர்களில் எண்ணிக்கை மற்றும் அதிகமாக மகசூல் எடுக்கும் முறைகள், இயந்திரங்கள் கொண்டு களை எடுத்தல், மண் அணைத்தல், அறுவடை செய்தல் உள்ளிட்ட விவசாய பணிகளை எளிதாகவும், குறைந்த செலவிலும் செய்வது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர். இதில் கரும்பு விவசாயிகள் மற்றும் கரும்பு ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.