பாரதியார் பிறந்த நாள்: தவெக-வினர் மரியாதை!
எட்டையபுரத்தில் மகாகவி பாரதியாரின் 143-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தினர் பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரத்தில் அமைந்துள்ள பாரதியார் இல்லம் மற்றும் மணிமண்டபத்தில் உள்ள பாரதியார் சிலைகளுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதைத் தொடர்ந்து அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கினர். பின்னர் கட்சியினர் அனைவரும் மகாகவி பாரதியாரின் சிலை முன்பாக நின்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். மேலும் பாரதியார் பிறந்தநாளை முன்னிட்டு எட்டயபுரத்திற்கு வருகை தந்த தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல்க்கு கட்சியினர் பட்டாசு வெடித்து, பொன்னாடை போற்றி, நினைவு பரிசுகள் வழங்கி உற்சாக வரவேற்பளித்தனர்.