நெல்லை மாநகர டவுன் ஆர்ச் அருகே திமுக சார்பில் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று (டிசம்பர் 12) மாலை நடைபெறுகிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் மேடைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் டவுன் ஆர்சிலிருந்து தெற்கு மவுண்ட் ரோடு வழியாக தென்காசி அம்பை செல்லும் பஸ்கள், லாரி உள்ளிட்ட வாகனங்கள் ஆர்ச் பகுதியில் இருந்து மேற்கு நோக்கி சென்று நெல்லையப்பர் கோயில் கீழ ரதவீதி வழியாக சம்பந்தப்பட்ட ஊர்களுக்கு செல்கின்றன.