முறுக்கு வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் பெண் தற்கொலை.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே முறுக்கு வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2024-12-12 06:40 GMT
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மாமரத்து பெட்டியைச் சேர்ந்த ராஜாராமின் மனைவி லதா (47) என்பவர் முறுக்கு மற்றும் மிட்டாய் வியாபாரம் செய்து வந்தார். இதில் பலத்த நஷ்டம் ஏற்பட்டதால் மன விரக்தியில் நேற்று (டிச.11) மதியம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது கணவர் ராஜாராம் உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை வருகின்றனர்.

Similar News