ரயில் பெட்டிகளில் வழங்கப்படும் தண்ணீரை வீணாக்காதீர்கள்- கரூர் மாவட்டம் உள்ளடக்கிய சேலம் கோட்ட PRO வேண்டுகோள்.
ரயில் பெட்டிகளில் வழங்கப்படும் தண்ணீரை வீணாக்காதீர்கள்- கரூர் மாவட்டம் உள்ளடக்கிய சேலம் கோட்ட PRO வேண்டுகோள்.
ரயில் பெட்டிகளில் வழங்கப்படும் தண்ணீரை வீணாக்காதீர்கள்- கரூர் மாவட்டம் உள்ளடக்கிய சேலம் கோட்ட PRO வேண்டுகோள். ரயில் பெட்டிகளில் வழங்கப்படும் தண்ணீரை வீணாக்க வேண்டாம் என தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்டம் மக்கள் தொடர்பு அலுவலர் அனைத்து பயணிகளுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார். ரயில் பயணங்களில் போது, சில பயணிகள், குறிப்பாக புனித யாத்திரை காலங்களில், ரயில் பெட்டியிலேயே குளிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இது தவறானது. பெட்டிகளில் வழங்கப்படும் தண்ணீர், கழிவறைகளில் பயன்படுத்துவதற்கும், பொது பயன்பாட்டிற்கும் மட்டுமே. அந்த நீரை குளிப்பதற்கு பயன்படுத்துவதால் சக பயணிகளுக்கு தண்ணீர் கிடைக்காமல் சிரமம் ஏற்படுகிறது. இது, கோச்சில் உள்ள அனைத்து பயணிகளுக்கும் விரும்பத்தகாத சூழ்நிலையை உருவாக்கும். இது தவிர்க்க முடியாத புகார்களுக்கு வழிவகுக்கலாம். இதனால்,ரயில்களை இயக்குவதில் தாமதம் ஏற்படலாம். இதே போல,சில பயணிகள் தங்கள் பயணத்தின் போது தங்கள் மத நடைமுறைகளின் ஒரு பகுதியாக கற்பூரம் ஏற்றும் நடைமுறையில் இருப்பதையும், இது நம்பிக்கையின் வெளிப்பாடாக இருந்தாலும், இது தீ விபத்துக்கள், பயணிகள் மற்றும் ரயில்வே சொத்துக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் . பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தவோ அல்லது அவர்களின் பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தவோ கூடாது. தீ தொடர்பான விபத்துகளைத் தடுக்கவும், அனைவருக்கும் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யவும், பயணிகள் எரியக்கூடிய மற்றும் வெடிக்கும் பொருட்களை வைத்திருந்தால் ரயில்வே சட்டம் 1989 பிரிவு 67, 164 மற்றும் 165 இன் கீழ் தண்டனை விதிக்கப்படும். எனவே, பயணிகள் பாதுகாப்பான மற்றும் இனிமையான பயணத்தை உறுதி செய்ய ரயில்வே அதிகாரிகளுடன் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என கரூர் மாவட்டம் உள்ளடக்கிய சேலம் கோட்ட ரயில்வே மக்கள் தொடர்பு அலுவலர் மரியா மைக்கேல் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.