நாமக்கல்: பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா, பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-12-12 09:43 GMT
நாமக்கல் மாவட்டம், வீசாணம் மற்றும் சேந்தமங்கலத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். நாமக்கல் ஊராட்சி ஒன்றியம், வீசாணம் ஊராட்சி, ஜெ.ஜெ நகரில் ரூ.13.50 இலட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டுள்ள 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை பார்வையிட்டு, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியிலிருந்து வழங்கப்பட்ட இணைப்புகளின் எண்ணிக்கை, பயன்பெறும் பொதுமக்களின் எண்ணிக்கை, குடிநீர் விநியோகிக்கும் கால முறை, குடிநீர் தொட்டி சுத்திகரிக்கும் கால முறை உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, சேந்தமங்கலம் அரசு மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு, மகப்பேறு பிரிவு, மகளிர் அறை, பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு, கண்காணிப்பு அறையில் ஆய்வு மேற்கொண்டு, சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் மருத்துவ சிகிச்சை மற்றும் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். மேலும், மருத்துவமனையில் கருவிகளின் பயன்பாட்டு நிலை, தினசரி வருகை தரும் நோயாளிகள் விபரம், நோயாளிகளுக்கு இரத்த மாதிரி பரிசோதனை மேற்கொண்ட விபரம், மருத்துவமனையில் பராமரிக்கப்படும் பதிவேடுகள், மருந்துகளின் இருப்பு, மழைக்கால நோய்த்தொற்றுகள் சிகிச்சை விபரம் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

Similar News