டூவீலர் வாங்கி தராததால் வாலிபர் தற்கொலை
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே புதிய டூவீலரை வாங்கி தராததால் வாலிபர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.;
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள சரந்தாங்கியில் வசிக்கும் ஆசை தம்பியின் மகன் அஜித் (23) என்பவர் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவர் தனது தாயிடம் இருசக்கர வாகனத்தை வாங்கி தருமாறு கேட்டுள்ளார் .அதற்கு தாய் வாங்கி தர மறுத்து கண்டித்துள்ளார். இதனால் மன விரக்தி அடைந்த அஜித் நேற்று முன்தினம்( டிச.10) மதியம் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை கண்ட பெற்றோர்கள் அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அந்த சிகிச்சை பலனின்றி நேற்று (டிச.12,) உயிரிழந்தார். இதுகுறித்து அவரது தாயார் லட்சுமி பாலமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.