தர்மபுரியில் அகல் விளக்கு விற்பனை ஜோர்
தர்மபுரி நகர கடைவீதி பகுதிகளில் கார்த்திகை தீபதிருவிழாவை முன்னிட்டு, அகல்விளக்கு விற்பனை சுடுப்பிடித்துள்ளது
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக கார்த்திகை தீப திருவிழா நாளை (13ம்தேதி) நடக்கிறது. இந்த கார்த்திகை தீப விழாவில் அகல்விளக்கு ஏற்றி வழிபடுவது வழக்கம். நாளை கார்த்திகை தீபம் கொண்டாடுவ தையொட்டி தர்மபுரி சித்தவிரப்பு செட்டி தெரு கடைவீதி மற்றும் பெரியார் சிலை உள்ளிட்ட பகுதிகளில் அகல்விளக்கு விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளது. ஒரு அகல் விளக்கு 3 ரூபாய் முதல் 10 வரை அளவை பொருத்து விற்பனை செய்யப்படுகிறது. வீடு, கோயில், அலுவலகங்களில் வைக்க சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.