வஜ்ரகிரி மலை மீது உள்ள ஸ்ரீ பசுபதிஸ்வரர் கோயிலில் மகா தீபம்
ஸ்ரீ பசுபதிஸ்வரர் கோயிலில் மகா தீபம்;

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் வஜ்ரகிரி மலை மீதுள்ள ஸ்ரீ பசுபதிஸ்வரர் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது. அச்சரப்பாக்கம் நகரில் உள்ள மலை என வஜ்ரகிரி மலை அழைக்கப்படுகிறது. இந்த மலையின் உச்சியில் ஸ்ரீ மரதாம்பிகை உடனுறை ஸ்ரீ பசுபதீஸ்வரர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் மலை மீது மகாதீபம் ஏற்றப்படுவது வழக்கம். இந்த ஆண்டு மகா தீ தீபமொன்று விநாயகர் பசுபதீஸ்வரர் மரகதாம்பிகை வஜ்ரகிரிவேலன் ஆகிய பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனைகள் நடைபெற்றன. மாலை 5 மணிக்கு மூல தீபம் ஊரின் மையப்பகுதியில் ஏற்றப்பட்டு நகரின் முக்கிய வீதிகளில் வள வளம் வந்து மலை உச்சியை வந்து அடைந்தது. அதன் பின்னர், கோயில் நிர்வாகி தேவராஜன், சிறப்பு விருந்தினராக மதுராந்தகம் டிஎஸ்பி மேகலா தீபத்தினை ஏற்றி வைக்க மகா தீபம் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் மகா தீபத்தினை வழிபட்டனர் இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அச்சரப்பாக்கம் ஸ்ரீ ஆட்சீஸ்வர்ர் திருக்கோயிலில் கார்த்திகை தீப பெருவிழாவை ஒட்டி பஞ்சமூர்த்தி புறப்பாடு நடைபெற்றது. கார்த்திகை தீபத்தை விநாயகப் பெருமான் ஆட்சீஸ்வரர், இளங்கிளி அம்மன், முருகப்பெருமான் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனைகள் நடைபெற்றன. மாலை 6 மணிக்கு மூலவர் சன்னதியில் இருந்து பஞ்ச தீபங்கள் கொண்டுவரப்பட்டு கோயிலின் கோபுரங்களில் தீபம் ஏற்றப்பட்டது. அதன் பின்னர், விநாயகப் பெருமான், ஆச்சி ஈஸ்வரர் இளங்கிளி அம்மன், வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமான், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்தி களுக்கும் சிறப்பு வழிபாடும் திருவீதி உலா வருதலும் நடைபெற்றன. அதன் பின்னர் கோயிலின் எதிரே சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியும் அம்மனையும் தரிசித்து சென்றனர். விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டது.