சுவர் இடிந்து விழுந்து மீன் வியாபாரி சாவு

போலீசார் வருவாய்த் துறையினர் விசாரணை;

Update: 2024-12-13 16:24 GMT
மங்கலம்பேட்டை அடுத்த புலியூர் கீழக்காலணியைச் சேர்ந்தவர் தவிடன் மகன் பழனி(43). மீன் வியாபாரியான இவர் தன்னுடைய குடும்பத்துடன் ஓட்டு வீட்டில் வசித்து வந்த நிலையில், வீட்டின் மண்சுவர் இடிந்து பழனி மீது விழுந்தது. அப்போது இடிபாடுகளுக்குள் சிக்கிக் கிடந்த பழனியை அப்பகுதி மக்கள் மீட்டனர். அப்போது படுகாயத்துடன் கிடந்த பழனி இறந்தது தெரியவந்தது. உடன் தகவல் கிடைத்து விரைந்து வந்த ஆலடி சப் இன்ஸ்பெக்டர் துரைக்கண்ணு தலைமையிலான போலீசார் பழனியின் பிரேதத்தை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டின் மண் சுவர் இடிந்து விழுந்து மீன் வியாபாரி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News