இருசக்கர வாகனத்தை திருடிய வரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

கந்தம்பாளையம் அருகே இருசக்கர வாகனத்தை திருடிய நபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.;

Update: 2024-12-14 16:17 GMT
பரமத்தி வேலூர், டிச.14: நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கந்தம்பாளையம் பள்ளி சாலையை சேர்ந்தவர் ஷாஜகான் மகன் ஹான் பாக்சு இவர் 13 ஆம் தேதி மாலை கந்தம்பாளையத்தில் உள்ள ஒரு போட்டோ ஸ்டுடியோ அருகே தனது இருசக்கர வாகனத்தை சாவியுடன் நிறுத்திவிட்டு டீ குடிப்பதற்காக சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது தனது இரு சக்கர வாகனம் காணாத போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் அருகில் இருந்த ஒரு கடையில் கேமராவில் பார்த்தபோது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வண்டியை எடுத்துச் சென்றது தெரியவந்தது. வண்டியின் உரிமையாளர் இன்று காலை தனது வாகனத்தை தேடிச் சென்ற போது கந்தம்பாளையம் அருகே உள்ள கொண்டரசம்பாளையத்தில் ஒரு வர்ஹான் பாக்சுவின் இருசக்கர வாகனத்தைஓட்டிச் சென்றது தெரிய வந்தது. மேலும் ஹான் பாக்சு அந்த நபரை துரத்தி பொதுமக்கள் உதவியுடன் வளைத்து பிடித்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து அந்த நபரை நல்லூர் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் திடுமல் அருகே உள்ள ஆவரங்காட்டு பகுதியைச் சேர்ந்த முட்ட கண்ணன் என்கின்ற கருப்பண்ணன் (62) என்பது தெரிய வந்தது. மேலும் நல்லூர் போலீஸ்சார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News