உர வினியோக கடைகளில் வேளாண் அதிகாரிகள் அதிரடி ஆய்வு

போலி உரம் விற்கப்படுகிறதா என மாதிரி எடுத்து பரிசோதனை;

Update: 2024-12-14 16:39 GMT
விருத்தாசலம் கோட்டத்தில் உள்ள விருத்தாசலம் கம்மாபுரம் நல்லூர் மங்களூர் ஸ்ரீமுஷ்ணம் ஆகிய வட்டாரங்களில் உள்ள உர விற்பனை நிலையங்களில் விருத்தாசலம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் விஜயகுமார் தலைமையில் வேளாண் அலுவலர்கள் கொண்ட குழுவினர் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். விருத்தாசலம் சன்னதி வீதியில் அமைந்துள்ள உரக்கடைகளில் ஆய்வு செய்தபோது அங்கு வைத்து விற்பனை செய்யப்படும் உரம் மூட்டைகள் தரமானதா? காலாவதி தேதி உள்ளதா? உரிய ஆவணங்கள் உள்ளதா என ஆய்வு செய்த அவர்கள், உரங்களின் புத்தக இருப்பு, உண்மை இருப்பு, விற்பனை முனைய கருவி இருப்பு விபரம், கொள்முதல் பட்டியல்கள், விற்பனை ரசீதுகள் ஆகியவற்றையும் ஆய்வு செய்து உர மாதிரிகள் எடுத்து தரமான உரமா? என கண்டறிய ஆய்வகத்திற்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதே போல அனைத்து உரக்கடைகளிலும் ஆய்வு செய்து வர மாதிரி எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி வருகின்றனர்.

Similar News