பரமத்தி வேலூர் தினசரி பூ மார்கெட் பூக்கள் விலை உயர்வு.
பரமத்தி வேலூர் தினசரி பூ ஏல மார்கெட்டில் பூக்களின் விலை உயர்வடைந்துள்ளது.;
பரமத்தி வேலூர்,டிச.15: பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளான பாலப்பட்டி,குப்புச்சிபாளையம்,அண்ணாநகர்,குஞ்சாம்பாளையம்,ஆனங்கூர் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு வகையான பூக்களை விவசாயிகள் பயிர் செய்துள்ளனர். அங்கு விளையும் பூக்கை பரமத்தி வேலூர் பஸ் நிலையம் அருகே உள்ள பூக்கள் ஏல மார்க்கெட்டிற்கு கொண்டு வருகின்றனர். கொண்டுவந்த பூக்களை பரமத்தி வேலூல் பகுதியில் உள்ள பூ வியாபாரிகள் வந்து ஏலம் கூரி வாங்கி செல்வது வலக்கம். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் மல்லிகை பூ 800-க்கும்,சம்பங்கி பூ-60-க்கும்,முல்லை 600-க்கும், அரளி பூ-300-க்கும்,செவ்வரளி 350-க்கும், ரோஸ் -250-க்கும், பன்னீர் ரோஸ் 160-க்கும் செவ்வந்தி பூ-140-க்கும், கனகாம்பரம் 300-க்கும் காக்கட்டான்,காக்கர்டான் 500-க்கும் ஏலம் போனது. இன்று நடைபெற்ற ஏலத்தில் மல்லிகை பூ1400-க்கும்,சம்பங்கி பூ-120-க்கும்,முல்லை 900-க்கும், அரளி பூ-550-க்கும்,செவ்வரளி 600-க்கும், ரோஸ் -380-க்கும், பன்னீர் ரோஸ் 280-க்கும் செவ்வந்தி பூ-180-க்கும், கனகாம்பரம் 400-க்கும் காக்கர்டான் 800-க்கும் ஏலம் போனது. பனிப்பொழி அதிக அளவு உள்ளதால் பூக்கள் உற்பத்தி குறைந்துள்ளதால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.