இலவச மருத்துவ முகாம்

முகாம்;

Update: 2024-12-16 04:30 GMT
அரகண்டநல்லுாரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடந்தது.பெஞ்சல் புயலால் அரகண்டநல்லுார் பச்சையம்மன் கோவில் பகுதி, ஆசிரியர் நகர், என பல்வேறு பகுதிகளும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. இப்பகுதி மக்களின் நலன் கருதி எம்.கே.எம்.எஸ்., குழுமத்தின் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. ஷாஜகான் தலைமை தாங்கினார். அக்பர் முகாமை துவக்கி வைத்தார். வாசிம்ராஜா, முஸ்டாக் அகமது, அப்துல் அக்கீம், சுந்தரமூர்த்தி, காமராஜ் முன்னிலை வகித்தனர். சென்னை தனியார் மருத்துவமனையைச் சேர்ந்த சிறப்பு மருத்துவ குழுவினர் முகாமில் பங்கேற்ற 500க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்து, இலவசமாக மருந்து மாத்திரைகளை வழங்கினர்.

Similar News