ஆண்டாள் கோவில் கருவறைக்குள் நுழைந்த இசையமைப்பாளர் இளையராஜா தடுத்து நிறுத்தி கருவறைக்குள் வெளியில் நிற்கச் சொன்ன ஜீயர்
ஆண்டாள் கோவில் கருவறைக்குள் நுழைந்த இசையமைப்பாளர் இளையராஜா தடுத்து நிறுத்தி கருவறைக்குள் வெளியில் நிற்கச் சொன்ன ஜீயர்;
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் உலக பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவில் கருவறைக்குள் நுழைந்த இசையமைப்பாளர் இளையராஜா தடுத்து நிறுத்தி கருவறைக்குள் வெளியில் நிற்கச் சொன்ன ஜீயர்., ஆண்டாள் கோவில் நிர்வாகம் பல்வேறு அரசு விதி மீறல்களில் ஈடுபட்டது பக்தர்களிடையே முகசூழிப்பை ஏற்படுத்தியது.. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழக அரசின் முத்திரைச் சின்னமாக விளங்கும் ராஜகோபுரம் அமைந்திருக்கும் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி பூர கொட்டகையில் இளையராஜா இசையமைத்து வெளியான திவ்ய பாசுரம் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி தனியார் நிறுவனம் மூலம் நடைபெற்றது.இதில் கலந்து கொள்வதற்காக பாரதிய ஜனதா கட்சியின் ராஜ்யசபா உறுப்பினரும், இசையமைப்பாளருமான இளையராஜா வருகை தந்தார். அவரை வரவேற்று தமிழக அரசின் இந்து அறநிலையத்துறைக்கு கட்டுப்பாட்டில் உள்ள ஆண்டாள் கோவில் கோவில் நிர்வாகம் சார்பில் பல்வேறு அரசு விதிமீறல்களில் ஈடுபட்டு வரவேற்பு அளித்தனர்.அரசு கடவுள்களைத் தவிர மனிதர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் எந்த ஒரு மரியாதையும் அளித்து அழைத்து வரக்கூடாது என்று தெரிவித்துள்ள நிலையில் இளையராஜா மற்றும் உடன் இருந்த ஹைதராபாத்தைச் சேர்ந்த சின்ன ஜீயர் என்று அழைக்கப்படும் சடகோப ராமானுஜ ஐயர், ஆண்டாள் கோவிலில் உள்ள மணவாள மாமுனிகள் மடத்தின் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சடகோப ராமானு ஜீயர் ஆகியோர்களுக்கு வெண்கொடை பிடித்து மேள தாளங்கள் முழங்கி கோவில் யானை வரவேற்ப்பு அளித்து பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. இளையராஜா கோவிலுக்குள் வருகை தந்து ஆண்டாள் ரெங்மன்னாரை தரிசனம் செய்ய கருவறைக்குள் நுழைந்தார் அப்போது அருகே இருந்த ஜீயர் மற்றும் பட்டர்கள் இளையராஜாவை கருவறைக்குள் வெளியே நிற்குமாறு கூறினார்கள்.இதனால் சற்று யோசித்த இளையராஜா சாமி இருக்கும் கருவறையில் இருந்து வெளியே வந்து சாமி தரிசனம் செய்தார். அவருக்கு அரசு விதிகளை மீறி பரிவட்டங்கள் கட்டப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. தனியார் நிகழ்ச்சிக்காக வருகை தந்த இளையராஜாவை மரியாதை கொடுப்பது போல் கொடுத்து கருவறைக்குள் நுழைந்தவரை வெளியே நிற்க சொன்னது பக்தர்களிடையே முகசுழிப்பை ஏற்படுத்தியது. செய்தியாளர்களுக்கு செய்தி சேகரிக்க அனுமதி மறுக்கப்பட்டது. பல்வேறு விதி மீறல்களில் ஈடுபட்ட கோவில் நிர்வாகம், பக்தர்களை தரிசனம் செய்யவிடாமல் தடுத்து நிறுத்திய தனியார் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் இவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா? என்று கேள்வி எழுந்துள்ளது.