ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்கள் புழல் சிறைக்கு மாற்றம்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்கள் புழல் சிறைக்கு மாற்றம்;

Update: 2024-12-16 08:36 GMT
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்கள் பூந்தமல்லி சிறையில் இருந்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டனர். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரான ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 28 பேரை போலீசார் கைது செய்தனர்.இந்நிலையில் வழக்கின் முக்கிய குற்றவாளியான பிரபல ரவுடி நாகேந்திரன் வேலூர் சிறையிலும், 3 பெண் கைதிகள் புழல் மகளிர் சிறையிலும், எஞ்சிய 23 பேர் பூந்தமல்லி கிளைச் சிறையிலும் அடைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் அண்மையில் பூந்தமல்லி கிளைச் சிறையில் கைதிகள் சிலர் செல்போனை பயன்படுத்தி விசாரணைக்குச் சென்ற துணை கண்காணிப்பாளருக்கும் மிரட்டல் விடுத்திருந்தனர். இந்நிலையில் பாதுகாப்பு மற்றும் நிர்வாக காரணங்களுக்காக ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பூந்தமல்லி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அஸ்வத்தாமன், பொன்னை பாலு உட்பட 23 பேரை நள்ளிரவில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புழல் மத்திய சிறைக்கு மாற்றினர்.

Similar News